இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடி ஜனவரி 30ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,500 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடியது சென்ற ஆண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயமாகும்.
ஏற்கெனவே விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில் நீரவ் மோடியின் மோசடி வங்கித் துறையைக் கடுமையாகப் பாதித்தது. சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.