டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் மாவட்டம்

மதுராந்தகம் வட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மதுராந்தகம் 

சட்ட பணிகள் குழு மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நகராட்சி இணைந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி மதுராந்தகம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி 

ஏ.சரிதா தலைமையில் குற்றவியல் நடுவர் நீதிபதி டி.திருமால் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.பிரியா ஆகியோர் முன்னிலையில் பேரணியை நீதிபதி ஏ.சரிதா தொடக்கிவைத்தார். 

பேரணி மதுராந்தகம் 

பஸ் நிலையத்தில் இருந்து தேரடிதெரு வழி வீதியாக ஆஸ்பிட்டல் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தது. பின்னர் இந்து மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. 

இதில் மதுராந்தகம் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் வழக்கறிஞர்கள் அகோரம், பாளையத்தான்,

ராஜேஷ், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ஏழுமலை, 

உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி, உள்ளிட்ட 

பலர் கலந்து கொண்டனர்.